5,000 ஊழியர்களுக்கு பணி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000-கோடி முதலீடு

சென்னை: பிரான்ஸ் நாட்டின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தனது கிளை நிறுவனத்தை அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தமிழ்நாடு தொடர்ந்து முதலீடுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் மற்றொரு சாதகமான செய்தியாக பிரான்ஸ் நடை சேர்ந்த பிரபல நிறுவனமான ஐ.டி சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் சுமார் 6 லட்சம் சதுர ஆதி பரப்பளவில் புதிய வளாகத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாகவும் 2027க்குள் சென்னை அலுவலகம் கட்டிமுடிக்கப்படும் என கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலம் அருகே உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்குவதாகவும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Related posts

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை