டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!!

புதுடெல்லி: டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று இந்தியா வந்தடைந்தார். குடியரசு தின விழா டெல்லியில் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இதற்காக அவர் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். விமானம் மூலம் இன்று பிற்பகல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்த மேக்ரானை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா மற்றும் முதல்வர் பஜன் லால் சர்மா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். முன்னதாக அவர் மோடியுடன் சாலை பேரணியிலும் பங்கேற்கிறார்.

இது தவிர ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரவு 8.50 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். நாளை டெல்லி கடைமை பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மேக்ரான் பங்கேற்கிறார். பிரான்ஸ் அதிபர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்