ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம்: ஐகோர்ட்

சென்னை: பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான எஃப்.ஐ.ஏ.சான்று பெற இரவு 8 மணி வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரவு 8 மணிக்குள் எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் முதல்முறையாக சர்வதேச கார் பந்தயம் நடப்பதால் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் இரவு 7 மணிக்கு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறப்பட்டு, அதை அடுத்து இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின

முனைவர் வெ.நல்லதம்பி எழுதியுள்ள “ஒலியலை ஒவியர்கள்” என்ற நூலினை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்!!