முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் நீட்டிப்பு

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த ஆண்டு மே 30ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக மே 26ம் தேதி உச்சநீதிமன்றம் 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த ஜாமீனை கடந்த 10ம் தேதி 24ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் ஜாமீனை நீட்டிக்கும்படி சத்யேந்தர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையேற்ற உச்சநீதிமன்றம் சத்யேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 5 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

Related posts

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!