முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை

டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் -ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு விசாரித்தது வருகிறது. அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்தார்.

Related posts

பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!