‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை தொடங்குகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: ‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்குகிறார். இதன் தொடக்கவிழா சென்னையில் வரும் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தினகரனை சந்தித்து அவருடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தார். அத்துடன் கோடநாடு கொலை வழக்கு விசாரணை விரிவுபடுத்த வலியுறுத்தி நேற்று ஓபிஎஸ் மற்றும் தினகரன் கூட்டாக இணைந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை தொடங்குகிறார்.

இதன் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் வரும் 21ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள நிலையில், ஓபிஎஸ் நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை தொடங்குகிறார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்