அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி மேலும் ஒரு வழக்கில் கைது

கரூர்: கரூர் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதே வழக்கில் கடந்த 2ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் சேகர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சேகரை கைது செய்து கரூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது வரும் 25ம் தேதி நீதிமன்ற காவலில் சேகரை வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி மத்திய சிறையில் சேகரை போலீசார் அடைத்தனர்.

 

Related posts

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி

மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி