முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,”இந்த விவகாரத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. எனவே அவரது வழக்கை இங்கு மாற்றக்கோரிய விவகாரத்தில் நாங்கள் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேலும் இதுதொடர்பான வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் தருவாயில் உள்ளதால் நாங்கள் எந்தவித நிவாரணமும் தற்போது வழங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு