நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 8 ஆண்டு சிறை

பாங்காங்: தாய்லாந்தில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய முன்னாள் பிரதமருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்தின் பிரதமராக 2001ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தக்‌ஷின் ஷினவாத்ரா. இவர் மீண்டும் 2005ம் ஆண்டும் பிரதமரானார். இந்நிலையில் தாய்லாந்தில் 2006ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ புரட்சி காரணமாக தக்‌ஷின் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து தாமாக நாட்டை விட்டு வெளியேறிய அவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் அவர் நேற்று மீண்டும் தாய்லாந்து திரும்பினார். அவரது கான்வாய் உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஆஜரானார். அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் பாங்காங்கின் பிரதான சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்