ஆந்திராவில் நடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ கைது


திருமலை: ஆந்திராவில் கடந்த மே 13ம் தேதி சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அப்போது பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியது. பல்நாடு மாவட்டம் மச்சர்லா தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அப்போதைய எம்எல்ஏவும், வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது பால்வாகேட் வாக்குச்சாவடி மையத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது, எம்.எல்.ஏ வந்ததை கண்ட வாக்குச்சாவடி ஊழியர்கள் எழுந்து நின்று கும்பிட்டனர். ஆனால் பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி நேராக வாக்குப்பதிவு அறைக்கு சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்து நொறுக்கினார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி தலைமறைவானார்.

இந்நிலையில் ேமலும், பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், 4 வழக்குகளில் கைதாகாமல் இருக்க பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி முன் ஜாமின் பெற்று மாச்சர்லா வந்தார். அதன்பிறகு இரண்டு முறை ஜாமீன் நீடிக்கப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீனை ஐகோர்ட் நேற்று ரத்து செய்தது. இதனையடுத்து பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டியை போலீசார் கைது செய்து நரச ராவ்பேட்டை எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை