முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஆதாரமற்ற புகார் மூலம் வழக்குப்பதிவு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆதாரமற்ற புகார் மூலம் வழக்குப்பதிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2001-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மழைநீர் சேகரிப்பு இயக்கம்’ 2011 முதல் மீண்டும் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டது.

இதனால், 2015ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த 306 இடங்கள், 2020ம் ஆண்டில் மூன்றாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலமாக ஆதரமற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும் மாநகராட்சி பொறியாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதுபோன்ற வழக்குகளால், அரசு அதிகாரிகள் மத்தியில் ஒரு தொய்வு ஏற்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு