கேரள மாஜி முதல்வர் மகள் பத்மஜாவுக்கு சீட் கொடுக்க பா.ஜ தலைவர்கள் எதிர்ப்பு: கட்சியில் சேர்ந்தவுடன் தொடங்கியது பிரச்னை

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் நேற்று முன்தினம் பா.ஜவில் இணைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பத்மஜா வேணுகோபாலுக்கு தேர்தலில் சீட் கொடுக்க மாநிலத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாநில தலைவர் சுரேந்திரனுக்கு இதில் கடும் எதிர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் பத்மஜா வேணுகோபால் பாஜவில் சேரும் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தபோதிலும் அவர் டெல்லி செல்ல மறுத்து விட்டார். இதற்கிடையே டெல்லியில் இருந்து நேற்று திருவனந்தபுரம் வந்த பத்மஜா வேணுகோபாலுக்கு விமானநிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர்களான முரளீதரன் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியில்லை: வரும் தேர்தலில் பத்மஜா போட்டியிட மாட்டார் என்று அவரது கணவர் வேணுகோபால் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பத்மஜா பாஜவில் சேர எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. வரும் தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார். அமலாக்கத் துறைக்கு பயந்து தான் அவர் பாஜவில் சேர்ந்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை’ என்றார்.

Related posts

மகாநதியில் 17கி.மீ. நடந்துவந்து உயிர் பிழைத்த பெண்..!!

திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது..!!

ஆகஸ்டு 8 வரை இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!!