கர்நாடக மாஜி முதல்வர் சதானந்தகவுடா பாஜவில் இருந்து விலகலா?

பெங்களூரு: கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் டி.வி.சதானந்தகவுடா, சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், கர்நாடக மாநில முதல்வர், ஒன்றிய அமைச்சர் என பல பொறுப்புகள் வகித்துள்ளார். தற்போது பெங்களூரு வடக்கு மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். வரும் தேர்தலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டு ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், விரக்தி அடைந்த அவர் பாஜவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில ஒக்கலிக சங்கத்திற்கு சென்ற சதானந்தகவுடா, சங்க நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். சதானந்த கவுடா தனது நிலைப்பாடு என்ன என்பதை இன்று அறிவிக்க உள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது