முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பாஜவில் இணைந்தார்

போபால்: மத்தியப்பிரதேச முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் ஆர்யா பாஜவில் இணைந்தார். மத்தியப்பிரதேசத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ரோஹித் ஆர்யா. இவர் ஓய்வு பெற்று 3 மாதங்கள் ஆகின்றது. இந்நிலையில் இவர் பாஜவில் தன்னை இணைத்துக்கொண்டார். சனியன்று போபாலில் நடந்த கட்சியின் பயிலரங்கத்தில் பேசிய முன்னாள் நீதிபதி ரோஹித் ஆர்யா, “பாஜ தலைமையிலான ஒன்றிய அரசின் பாரதிய நீதி சன்ஹிதாவை வரவேற்கிறேன். இது சாமானிய மக்களுக்கு நீதி வழங்குவதை நோக்கமாக கொண்ட ஒரு பெரிய சீர்திருத்தம்” என்று பாராட்டினார். இதனை தொடர்ந்து பாஜவில் ரோஹித் ஆர்யா தன்னை இணைத்துக்கொண்டார். இது குறித்து நேற்று முன்னாள் நீதிபதி ரோஹத் ஆர்யா அளித்த பேட்டியில், “பிரதமர் மோடியின் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி பணிகள் மற்றும் பாஜவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜவில் இணைந்தேன்” என்றார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி