தெலங்கானா முன்னாள் துணை முதல்வர், ஐதராபாத் மேயர் காங்கிரசில் இணைந்தனர்

திருமலை: தெலங்கானாவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் பிஆர்எஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கேசவ ராவ் மற்றும் அவரது மகளுமான ஐதராபாத் மாநகராட்சி மேயர் கட்வால் விஜயலட்சுமி நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இதேபோன்று பிஆர்எஸ் கட்சி பேரவை உறுப்பினரும், முன்னாள் துணை முதல்வருமான கடியம் ஸ்ரீஹரி, அவரது மகள் கடியம் காவ்யாவுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த காவ்யாவிற்கு வாரங்கல் எம்.பி. வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பிஆர்எஸ் கட்சி சார்பில் வாரங்கல் வேட்பாளராக கடியம் காவ்யா அறிவிக்கப் பட்ட போதிலும் அவர் கட்சியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு