வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய அதிமுக மாஜி கவுன்சிலர் கைது

பந்தலூர்: வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய அதிமுக மாஜி கவுன்சிலர் மற்றும் சிறுமியின் மாமன் ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வசிப்பவர் சந்திரன் (55). கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவரது மனைவி இறந்து சில வருடங்கள் ஆகிறது. இதனால் இவர் 4 வயதில் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளார். தற்போது அச்சிறுமிக்கு வயது 17 ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி வயிற்று வலி ஏற்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாகி 7 மாதத்தில் கருக்கலைப்பு செய்ததும், முழுமையாக கருக்கலைப்பு ஆகாமல் இருந்ததால் வயிற்று வலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து மருத்துவர், செவிலியர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது வளர்ப்பு தந்தை சந்திரன் மற்றும் அவரது மனைவியின் தம்பி குன்னூரை சேர்ந்த நந்தகுமார் (35) ஆகிய இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து கூடலூர் சப்-சிறையில் அடைத்தனர்.

* மாணவிகளிடம் சில்மிஷம் ஹெச்.எம் மீது போக்சோ
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே பெரியவடகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் காடையாம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு(59). இவர் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, ஓமலூர் மகளிர் போலீசில் புகார் வந்தது. இதன்பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், கடந்த 19ம் தேதி 5ம் வகுப்பு மாணவி ஒருவர், பிரேயரில் நின்றிருந்த போது, மாணவியின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 20 ரூபாயை,

அவருக்கு தெரியாமல் தலைமை ஆசிரியர் எடுத்துள்ளார். பின்னர், வீட்டுப்பாடத்தை காட்டிய போது, அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதே போல், 26ம் தேதி நடந்த பிரேயரில், 2 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சின்னராசு மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சனை! சமரசம் செய்து கொண்டதால் நடிகை திரிஷாவின் வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்

தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைய வழிவகை செய்யும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2,119 கோடி கடனுதவி

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்