மாஜி டிஜிபி, எம்எல்ஏக்கள் உள்பட ராஜஸ்தானில் 16 பேர் பாஜவில் ஐக்கியம்

ஜெய்பூர்: ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏக்கள், காவல்துறை அதிகாரி உள்பட 16 பேர் பாஜவில் இணைந்தனர். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏக்கள் மோதிலால் கரேரா, அனிதா கட்டாரா, கோபிசந்த் குர்ஜார், ஓய்வு பெற்ற நீதிபதி கிஷன் லால் குர்ஜார், மத்தியபிரதேச முன்னாள் காவல்துறை தலைவர் பவன் குமார் ஜெயின், காங்கிரஸ் தலைவர் மிருது ரேகா சவுத்ரி ஆகியோர் நேற்று பாஜவில் இணைந்தனர். அவர்களுடன் வேறுசிலரும் பாஜவில் இணைந்தனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை