முன்னாள் முதல்வர் மெகபூபாவுக்கு வீட்டுக்காவல்

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் 1931ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி தோக்ரா ஆட்சியின்போது ராணுவத்தினால் 22 காஷ்மீர் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த இருந்தனர். ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்க்கும் வகையில் மெகபூபா முப்தியை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற உமர் அப்துல்லாவுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை. அவர் நடந்தே தனது கட்சி அலுவலகத்துக்கு சென்றார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு