கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்: முக்கிய நபராக கருதப்படும் மாதேஷ் என்பவர் உள்பட இதுவரை 11 பேர் கைது!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய நபர் உட்பட இதுவரை 11 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விஷச்சாராயத்துக்கு மெத்தனால் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாதேஷ் என்பவரை சென்னையில் வைத்து மடக்கி பிடித்தனர். அவருடன் ஜோசப், சின்னத்துரை உட்பட இதுவரை 11பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் விஷச்சாராயம் விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன், மனைவி விஜயா ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே கள்ளக்குறிச்சி பகுதியில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். அதேபோல தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையிலான விசாரணை குழுவும் விசாரணையை தொடங்கியுள்ளது. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

Related posts

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி