கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு 10 லட்சம் தரமுடியும்.. குழந்தை இறந்ததற்கு 5 லட்சம் தரமுடியாதா..? ஐகோர்ட்கிளை கேள்வி

மதுரை: மதுரை இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுக்க அரசிடம் நிதி உள்ளது, ஆனால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமிக்கு இழப்பீடு கொடுக்காமல் மேல்முறையீடு செய்யப்பட்டுகிறது.இது அரசுக்கு வெட்கக்கேடானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில் எவ்வாறு மேல்முறையீடு செய்தீர்கள் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்த அதிபதி, என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் 11 வயது மகள் சரண்யா 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12.5.2014-ல் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா உயிரிழந்தார். அதற்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சிறுமி உயிரிழப்புக்கு காரணமான சுவரை கட்டுக்குடுத்தது அரசு தான். இதற்கு அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என கூறி ரூ.5 லட்சம் அபராதம் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி