போலி கையெழுத்து போட்டு தம்பதி ரூ.75 கோடி மோசடி

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (58). செல்வகுமார் சகோதரர் சீனிவாசன், அவரது மனைவி பிரமிளா மற்றும் சகோதரர், சகோதரி ஆகியோர் காந்திபுரம் பகுதியில் உள்ள வாகன உதிரி பாகம் விற்பனை நிலையத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இதனை சீனிவாசன் அவரது மனைவி பிரமிளா ஆகிய இருவரும் முழுநேரமாக கவனித்து வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகளை மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்றி நஞ்சப்பா ரோட்டில் சீனிவாசன் மற்றும் பிரமிளா ஆகியோர் புதிதாக மற்றொரு வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், செல்வகுமார் நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை ஆராய்ந்தார். அதில், சீனிவாசனும், பிரமிளாவும் பங்குதாரர்களின் பங்குகளை போலி கையெழுத்து போட்டு வங்கியில் கடன் பெற்று புதிய விற்பனை நிலையத்தை தொடங்கியது தெரியவந்தது. இதன்மூலம், இருவரும் பங்குதாரர்களுக்கு சேர வேண்டிய பங்குதொகை ரூ.75 கோடியை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன்,பிரமிளா மற்றும் 2 தனியார் வங்கி நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்