கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியில் மன்னவனூர் சூழல் பூங்கா, ஆட்டுப்பண்ணை, கூக்கால் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், பாரி கோம்பை உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதனால் மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார், தன்னார்வலர்கள், ெபாதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இதையடுத்து மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல 10 நாட்களுக்கு பிறகு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டுத்தீ கட்டுக்குள் வந்த பகுதியில் மின்பணியாளர்கள், மின்பாதை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி