வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா சென்று ஈர்த்த முதலீடு ₹7,618 கோடி. 4 முறை அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ₹18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே. கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜூன் 2020ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில், 7 மாதத்திற்குள் ₹24,458 கோடி முதலீட்டில், 24 திட்டங்களை சென்னை, ஓட்டல் லீலா பேலசில் நடந்த விழாவில் நானே தொடங்கி வைத்தேன்.

இந்த புள்ளி விவரங்களை அரசு கோப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம். எனவே, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது!