மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி: ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே குற்றச்சாட்டு

பெங்களூரு: இந்திய மல்யுத்த சங்க தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ்பூஷனுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கு பின்னால் வெளிநாட்டினரின் சதி உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே குற்றம்சாட்டினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய மல்யுத்த சங்க தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இருப்பினும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதனிடையில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு வெளிநாடுகளை சேர்ந்த சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் சமீபத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டவர்கள். இதை பார்க்கும்போது, போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டினரின் சதி இருப்பதாக தெரியவருகிறது என்றார்.

Related posts

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்