தொழிலாளிக்கு பாட்டில் குத்து

பெரம்பூர்: திருவொற்றியூரை சேர்ந்தவர் குமார் (25), பெரம்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குப்பை சேகரித்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பெரம்பூர் அகரம் எஸ்.ஆர்.பி கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது அவரை வழிமறித்த பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை மணியம்மை நகரை சேர்ந்த ரவுடி சேரமான் (26), இவர் வைத்திருந்த மதுபாட்டிலை கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சேரமான் தகராறில் ஈடுபட்டு, அருகில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து குமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.

இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று காலை சேரமானை கைது செய்தனர். இவர்மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேற்றம்!

சென்னையில் ரூ.10.85 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம்