இந்தியாவுடனான கலாசார தொடர்புக்கு எடுத்துக் காட்டு பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் இந்தோனேசியா பிரம்பனன் கோயில்

யோக்யகர்த்தா: இந்தியாவுடனான ஆழ்ந்த கலாசார தொடர்புக்கு எடுத்துக்காட்டாக இந்தோனேசியாவில் உள்ள பழமையான பிரம்பனன் கோயில் விளங்குகிறது. இந்தோனேசியாவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து 17 கிமீ தொலைவில் பிரம்பனன் இந்து கோயில் அமைந்துள்ளது. 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பால் புரதான தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏரராளமன இந்து கோயில்கள் அங்கு உள்ளன. பிரம்மா,விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தினமும் 3 வேளை பூஜைகள் நடக்கிறது. இதற்காக 2 பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில் பூசாரி கூறுகையில்,‘‘கோயிலில் தினமும் 3 வேளை பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் கலாசாரம்,வரலாற்று ரீதியாக தொடர்பு உள்ளது. தென் கிழக்கு ஆசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஆழ்ந்த கலாசார தொடர்புக்கு இந்த கோயில் எடுத்துகாட்டு’’ என்றார். பிரம்பனன் கோயிலுக்கு அருகில் போரோபுதூர் புத்தர் கோயில் உள்ளது.

இது போல் பழமையான கோயில்களுக்கு உள்நாட்டு சுற்றுலாவாசிகள் அதிகளவில் வருகின்றனர். விடுமுறை கழிக்க பாலி தீவுக்கு செல்லும் இந்தியர்கள் யோக்யகர்த்தாவில் உள்ள கோயில்களை பார்வையிட வருவது இல்லை என அங்கு உள்ள சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள லாவோஸ்,வியட்நாம்,கம்போடியா, இந்தோனேசியா நாடுகளில் உள்ள புரதான தலங்களை மீட்பதற்கு ஒன்றிய அரசு தாராளமாக நிதி வழங்கி வருகிறது. தொல்லியல் துறை அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் ஜெயந்த் கோபர்கடே கூறுகையில்,‘‘பிரம்பனன் கோயில் புனரமைப்பு பணிகளை இந்தியா மேற்கொள்ளவில்லை. ஆனால், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் சில இடங்களில் உள்ள கோயில்களை புனரமைப்பதற்கு இந்தியா உதவி அளிக்கிறது ’’ என்றார்.

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு