மேலும் 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா!!

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் மேலும் 10 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதித்தது. இதனை கண்டித்து இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி தருவைக்குளத்தில் இருந்து 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சோதனை செய்துள்ளனர். சோதனையில் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்த நிலையிலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும், 2 படகுகளையும் சிறை பிடித்தது இலங்கை அரசு.

இதையடுத்து அவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 5ம் தேதி கைது செய்த மீனவர்கள் 12 பேருக்கும் ரூ.3.5கோடி அபராதமும், 6மாத சிறை தண்டனையும் விதித்து இருந்தது. இதையடுத்து தூத்துக்குடி தருவைக்குளத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 22பேரில் 10 பேருக்கு இன்று தலா ரூ.3.5 கோடி அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதித்தது இலங்கை அரசு. இதனை கண்டித்து இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூத்துக்குடி தருவைக்குளத்து மீனவர்கள் மத்தியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

Related posts

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது

செருப்பை கழற்றிவிட்டு வரும்படி கூறிய டாக்டருக்கு சரமாரி அடி, உதை