காலடி மூலம் நிலப்பரப்பில் ஏற்படும் அதிர்வுகளை கணிக்கும் யானைகள்: ஆராய்ச்சியாளர் தகவல்

மன்னார்குடி: காலடி மூலம் நிலப்பரப்பில் ஏற்படும் அதிர்வுகளை யானைகள் துல்லியமாக கணிக்கும் ஆற்றல் கொண்டவை என ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட யானை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகணேசன் கூறியதாவது: யானைகள் அவற்றின் காலடி மூலம் நிலப்பரப்பின் அதிர்வுகளை அறியக்கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றை யானைகள் எவ்வாறு உணர்கின்றன என்பதை இன்றும் விஞ்ஞான பூர்வமாக அறிய இயலவில்லை. யானைகளிடம் மட்டுமே இந்த குணாதிசயம் காணப்படும். காட்டு யானைகளை ஆராய்ச்சிக்காக பின்தொடர்ந்து செல்லும்போது, எங்களது கால் பாதங்களின் அதிர்வுகளை யானைகள் உணர்ந்து அவைகளின் வழித்தடத்தை மாற்றிவிடும்.

யானைகளால் எங்களது வாசனையை நுகரக்கூடிய ஆற்றல் மிகக்குறைவு. ஆனால் கால் அதிர்வுகளால் நிலப்பரப்பில் உண்டாகும் அதிர்வுகள் மூலம் துல்லியமாக நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க கூடிய ஆற்றல் கொண்டவை. பொதுவாக இப்படிப்பட்ட அதிர்வுகளை யானைகள் உணரும்போது அந்த இடத்திலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் அவைகள் செல்ல கூடியவை. சில சமயங்களில் மனித கால் அதிர்வுகளை நுகர்ந்து நாம் இருக்கும் இடத்தை மிக துல்லியமாக கண்டறிந்து ஆபத்தை உண்டாக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. வனப்பகுதியில் எங்களது ஆராய்ச்சிக்காக யானைகளை பின்தொடர்ந்து செல்லும்போது சில யானைக்கூட்டங்கள் எந்தவித சத்தமும் இல்லாமல் சற்று நின்று காற்றை நுகர்ந்த பிறகு வேறு வனப்பகுதிக்கு வேகமாக வழித்தடத்தை மாற்றம் செய்யும். அப்படிப்பட்ட யானை கூட்டங்களை பின் தொடர்ந்து சென்று ஆராய்ச்சி குறிப்புகளை எடுக்க முடியாது. சில ஆண் யானைகள், நமது இருப்பிட வாசனையை அறியும் பட்சத்தில் நமக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை