புற்றுநோயை ஏற்படுத்தும் உணவு வகைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது. உதாரணமாக, வாழ்க்கை முறை மாற்றங்கள், வளர்சிதை மாற்றங்கள், பரம்பரை காரணமாக என பல காரணங்கள் சொல்லலாம். அதில் இன்றைய சூழலில் முக்கியமாக பார்க்கப்படுவது, நாம் உண்ணும் உணவுகளாலும் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதுதான். இது குறித்து புற்றுநோய் ஆய்வு கழகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தவிர்க்க வேண்டிய உணவுகளாக ஒரு சில உணவுகளை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அவற்றைப் பார்ப்போம்.

மரபணு மாற்றப்பட்ட உணவு (அனைத்து வகையான ஹைப்ரிட் காய்கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் கார்ன்), மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன், கேன் உணவுகள் (குளிர்பானங்கள் போன்றவற்றை பேக் செய்ய பயன்படும் Tetrapackin இல் bisphenol – A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. குடிக்கும் பானத்துடன் இந்த மூலக்கூறு சேரும்போது நம் மூளை செல்களை பாதிக்கும்), எரிக்கப்பட்ட இறைச்சி, (அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் புற்றுநோய் செல்களை உண்டு செய்யும் Heterocyclic Aromatic Aminesயால் சிதைக்கப்பட்டு வளர்சிதை மாற்றங்களை உருவாக்குகிறது.

வெள்ளை சர்க்கரை: கரும்பில் இருந்து எடுக்கும் சர்க்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சர்க்கரையை மந்த விஷமாக மாற்றுகிறது. வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை, பனை வெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

விற்பனைக்கு வரும் உப்பிட்டு பதசெய்யப்பட்ட உணவுகள்: ஊறுகாய் வகைகளில் நிச்சயம் நைட்ரேட் செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த நைட்ரேட்ஸை உடலில் செலுத்தி வளர்சிதை மாற்றங்களை உருவாக்குகிறது. இதன்மூலம் சிலருக்கு புற்றுநோய் உண்டாகலாம்.

சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்: கோக் முதல் மற்ற பானங்கள் அனைத்திலும் மேலே சொன்ன வெள்ளை சர்க்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சர்க்கரையை விட கொடூரமான சோளச்சர்க்கரை (கார்ன் சிரப்) சேர்க்கிறார்கள். இது நம் உடலில் அதிகப்படியான வளர்சிதை மாற்றங்களை உருவாக்குகிறது.

சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: மைதா, கோதுமை மாவு, தோசா மிக்ஸ் போன்ற மாவு வகைகள்தான். கடையில் விற்கப்படும் 80 சதவீத மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BRO-MIDE வரை கலப்பார்கள். அதனால்தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்.

பண்ணை மீன்கள்: பண்ணை மீன்கள் ஒரே தொட்டியிலோ, குட்டையிலோ வளர்க்கப்படுவதால் தொற்று அதிகம் ஏற்படுகிறது. தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ஆன்டிபயாடிக் ஊசி போடப்படுகிறது. அதைவிட பெஸ்டிசைட் செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. எனவே, விலை மலிவில் புற்றுநோய் செல்களை தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒருமுறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்துபெற வேண்டிய ஒமேகா 3 பேட்டி ஆசிட் வளர்ப்பு மீன்களில் 1 சதவீதம் கூட இருக்காது. எப்பொழுதும் ஃபிரெஷ் கடல் மீன்தான் சிறந்தது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விதைகள், காய்களிகளிலிருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல ரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணெய்களில் தான் நாமும், நம் குடும்ப நபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். எனவே, அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்களை வாங்கி உபயோகப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.முடிந்த வரை சுகர் ப்ரீ, டயட், லைட், ஃபேட் ப்ரீ போன்று அச்சிடப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது.

இது போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பதோடு, இயற்கையாக விளையும் காய்கறிகள், அரிசி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கும் ரசாயனங்களை தவிர்க்கலாம். இதன் மூலம் புற்றுநோய் வரும் அபாயத்தையும் தவிர்க்கலாம்.

செயற்கையான சுவையூட்டிகள்

இன்று உணவின் ருசியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வகையான செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துமே பல்வேறு வகையான வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுபவை. இவற்றை நீண்ட கால அளவில் பயன்படுத்தும் போது குடல் மற்றும் இரைப்பையை பதம்பார்க்கும் தன்மை உடையவை. இவற்றாலும் ஒருவருக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த செயற்கைப் பொருட்கள் கொண்ட உணவுகளை அளவாக, எப்போதாவது பயன்படுத்துவது நன்று. குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்காமல் இருப்பதே நல்லது.

தொகுப்பு: ரிஷி

Related posts

ஆயுர்வேதத் தீர்வு!

மையோசைடிஸ் ஆபத்தானதா?

கவுன்சலிங் ரூம்