உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை போக்க இலங்கைக்கு தானியங்கள் ஏற்றுமதி: பிம்ஸ்டெக் தலைவர் அறிவிப்பு

சென்னை: இலங்கைக்கு முட்டை, மிளகாய், வெங்காயம், பருப்பு வகைகள், தானியங்கள், மினரல்ஸ், கெமிக்கல்ஸ் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்ய பிம்ஸ்டெக் அமைப்பு திட்டமிட்டு உள்ளது. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு எனப்படும் பிம்ஸ்டெக் (BIMSTEC) என்ற அமைப்பின் 2023ம் மாநாடு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது. இதில் 7 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டுக்கு பிம்ஸ்டெக் புதிய தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மேலும், மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பின்னர், பிம்ஸ்டெக் புதிய தலைவர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பில் வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் உள்ளன.
வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்திருக்கும் நாடுகளிடையே தொழில்நுட்ப, பொருளாதாரம் உள்ளிட்ட 14 வகையான வர்த்தகத்திற்கு ஒத்துழைக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநாட்டில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. குறிப்பாக இலங்கையில் தற்போது உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது அதற்கு உதவும் வகையில் இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு 9 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

மேலும், மிளகாய், வெங்காயம், பருப்பு வகைகள், தானியங்கள், மினரல்ஸ், கெமிக்கல்ஸ் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. புதிய தலைவராக நான் பொறுப்பேற்று உள்ளேன். வரும் காலத்தில் முதலீட்டுக்காரர்கள் மற்ற நாட்டுக்கு சென்று தொழில் செய்ய எங்கள் அமைப்பு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பிஎஸ்பி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!