உணவு, உர மானியம் ரூ.31 ஆயிரம் கோடி குறைப்பு: ஏழைகள், விவசாயிகள் அதிர்ச்சி

புதுடெல்லி: உணவு, உர மானியம் ரூ.31 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது ஏழைகள், விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டில், 2024-25ம் நிதியாண்டில் உணவு மானியத்துக்கு ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட மானிய தொகையான ரூ.2.12 லட்சம் கோடியை விட குறைவு. அதாவது நடப்பு ஆண்டைவிட அடுத்த நிதியாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி உணவு மானியம் குறைக்கப்பட்டுள்ளது.

இது ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்களை நம்பி உள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல், நடப்பு நிதியாண்டில் 1.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்த உர மானியம் அடுத்த நிதியாண்டில் 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. உர மானியம் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால், உரம் விலை அதிரிக்கும் அபாயம் உள்ளதால், விவசாய விளை பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

Related posts

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்