Food spot

மட்டன் சுக்கா

உணவுகளில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவது சிக்கன், மட்டன், இறால் மற்றும் மீன் வகைகள் தான். அசைவம் சாப்பிடும் நிறைய பேர் பிரியாணிக்குப் பிறகு விரும்பி சாப்பிடுவது மட்டன் சுக்காவாகத்தான் இருக்கும். மட்டன் சுக்காவைப் பொருத்தவரைக்கும் சோறு, இட்லி, தோசை, பரோட்டா என அனைத்துக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும். சென்னையில் தரமான ஒரு மட்டன் சுக்கா சாப்பிடுவதற்கு ஏற்ற இடம் என்றால் அது ராமாபுரம் சாந்தி நகரில் உள்ள சோழன் மெஸ்தான். மட்டன் பீஸில் முழுவதுமாக இறங்கி இருக்கும் மசாலாவின் டேஸ்ட் இன்னொரு பிளேட் மட்டன் சுக்காவை ஆர்டர் செய்து சாப்பிட வைக்கும். மட்டன் சுக்காவை ஒரு வெட்டு வெட்டுங்க!

ஃப்ரான் தந்தூரி

சிக்கன் தந்தூரி சாப்பிட்டு இருப்போம். ஃபிஷ் தந்தூரி சாப்பிட்டு இருப்போம். இந்த இரண்டு டிஷ்சையும் டேக் ஓவர் செய்கிற ஒரு தந்தூரி இருக்கிறது. அது ஃப்ரான் தந்தூரி. ஒரு மிடில் சைஸ் ஃப்ரானை எடுத்து அதோடு சேர்க்க வேண்டிய மசாலாக்களைச் சேர்த்து நன்கு ஊற வைத்து தந்தூரி அடுப்பில் சுட வைத்து ஃப்ரான் தந்தூரியை எடுத்து சாப்பிடும்போது அதன் சுவை ஆளையே கிறங்கடிக்கும். இத்தகைய ஃப்ரான் தந்தூரி கோடம்பாக்கத்தில் இருக்கிற ஹலன் அட்டியில் கிடைக்கிறது. இந்த ஃப்ரான் தந்தூரியை அவர்கள் கொடுக்கும் சேஸ்வான் சாஸோடு சேர்த்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட்தான்.

சிக்கன் ரோஸ்ட்

வீட்டு முறையில் சிக்கன் ரோஸ்ட்டை உணவகங்களில் எதிர்ப்பார்ப்பது கஷ்டம் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு வீட்டுமுறையில் சமைக்கும் உணவகங்கள் ஏராளமாக வந்துவிட்டன. அந்த வகையில் ஃபுட்டிகளின் சொர்க்க இடமான அண்ணா நகரில் இருக்கும் தம்பி விலாஸில் வீட்டு செய்முறையில் செய்து தரக்கூடிய சிக்கன் ரோஸ்ட் ரொம்பவும் ஃபேமஸ். அளவான காரம், பதமாக வெந்த சிக்கன் என்று இவர்கள் கொடுக்கும் ஸ்பெஷல் சிக்கன் ரோஸ்ட் ஒரு தரமான டிஷ். ஒரு சூப்பரான சிக்கன் ரோஸ்ட் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அண்ணாநகர் தம்பி விலாஸ் பெஸ்ட் ஸ்பாட்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்