Food spot

லைவ் ஐஸ்கிரீம்

பலருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்தான். மழை, வெயில் என எது வந்தாலும் ஐஸ்கிரீமை விரும்பிச் சாப்பிடுபவர்கள்தான் நாமெல்லாம். பல இடங்களில் ஐஸ்கிரீம் என்றால் வெறும் ஐஸில் கலர் மற்றும் சிரப் சேர்த்து ஐஸ்கிரீமாக கொடுப்பார்கள். இன்னும் சில இடங்களில் பவுடரில் ஐஸ்கிரீம் மேக் செய்து கொடுப்பார்கள். இப்படிப்பட்ட ஐஸ்கிரீம்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த நமக்கு ஒரிஜினல் பழங்களில் ஐஸ்கிரீம் செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்? ஆவடியில் இருக்கிற நட்ரோல்ஸ் லைவ் ஐஸ்கிரீம் கடையில் மாங்காய், கொய்யா போன்ற பழங்களில் இருந்து நேரடியாக ஐஸ்கிரீம் செய்து தருகிறார்கள். ஒரிஜினல் பழங்களில் ஐஸ்கிரீம் செய்து தருவதால் உடல்நலத்திற்கும் உகந்ததாக இருக்கிறது.

காடை ஃப்ரை

சென்னையில் திரும்பும் இடமெல்லாம் செட்டிநாடு ஸ்டைல் ரெஸ்டாரன்டுகள் பரவிக் கிடக்கின்றன. மசாலாவின் காரசாரமான ருசிக்காக மக்களும் செட்டிநாட்டு உணவகங்களைத் தேடிச் செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் பெரும்பாலும் கோழி, ஆடு என்றுஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இவர்களில் பலர் செட்டிநாட்டு ஸ்டைலில் செய்து கொடுக்கப்படும் காடை சாப்பிட மறந்து விடுகின்றனர். அந்த வகையில் சென்னை மேடவாக்கத்தில் உள்ள அய்யனார் உணவகத்தில் காடை ஃப்ரையை சாப்பாடு, பரோட்டாவோடு சேர்த்து சாப்பிடும்போது தாறுமாறான காம்பினேஷனாக இருக்கும். ஆத்தண்டிக் செட்டிநாட்டு ஸ்டைலில் காடை சாப்பிட விரும்புவர்கள் அய்யனார் உணவகத்தை நாடலாம்.

மீன் பார்பிக்யூ

சென்னையில் பல உணவகங்களில் சிக்கனில் பார்பிக்யூ கிடைக்கும். மிக அரிதாக மட்டனில் பார்பிக்யூ செய்து கொடுப்பார்கள். ஆனால், மீனில் பார்பிக்யூ சாப்பிடவேண்டுமென்றால ஸ்டார் ஹோட்டலுக்குத்தான் செல்ல வேண்டும். சென்னையில் சாதாரண உணவகங்களில் மீன் பார்பிக்யூ கிடைப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். மீனில் பார்பிக்யூவை குறைந்த விலையில் சாப்பிட வேண்டும் என் நினைப்பவர்களுக்கு சென்னை பாலவாக்கம் கடற்கரையில் இருக்கிற கல்லோரம் கடல் உணவகம் நல்ல சாய்ஸ். சுத்தமான மீனை நமக்கு முன்னே பார்பிக்யூ செய்து சாப்பிடக் கொடுக்கிறார்கள்.

 

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்