Food spot

முட்டை மிட்டாய்

முட்டையில் தயாராகிற மிட்டாய் வகைகளில் இந்த முட்டை மிட்டாய்தான் ரொம்ப ஸ்பெஷல். பார்ப்பதற்கு ஹல்வா போல இருந்தாலும் சுவைத்துப் பார்க்கும்போது மிட்டாய் போலவும் இருக்கும். அதிகம் மெனக்கெட்டுச் செய்யக்கூடிய இந்த முட்டை மிட்டாயை முதன்முதலில் சென்னைக்கு கொண்டுவந்த கடை எதுவென்றால் ராயப்பேட்டையில் இருக்கிற செய்யது முட்டை மிட்டாய் கடைதான். தினமும் செஞ்சியில் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிற இந்த முட்டை மிட்டாய்க்கு படு கிராக்கி இருக்கிறது.

தம் கா ரோட்

மொஹரம் பண்டிகைக்கு இஸ்லாமிய வீடுகளில் விசேஷமாக செய்யப்படும் ஹல்வாதான் இந்த தம் கா ரோட் ஹல்வா. ஆனால், கடந்த பல வருடங்களாகவே இந்த ஹல்வாவை யாரும் வீடுகளில் செய்வது கிடையாது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கிற பாஷா ஹல்வா வாலா என்கிற கடையில் மட்டும்தான் தற்போது கிடைக்கிறது. ரவை, நெய், சீனி, வெள்ளரி விதைகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஹல்வா சுவையில் தனித்துவமானது. 100 வருடங்களுக்கு மேலாக செயல்படுகிற இந்தக் கடையில் இந்த ஹல்வாவை சுவைத்துப் பார்க்கவே கூட்டம் கூடுகிறது.

கோதுமை போளி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் டிஷ் என்றால் அது போளிதான். இந்த போளி பெரும்பாலும் மைதாவில்தான் பல இடங்களில் கிடைக்கும். கோதுமை மாவில் போளி எங்கேயுமே கிடைக்காது என்றே சொல்லலாம். ஆனால், நங்கநல்லூரில் இருக்கிற மாமிஸ் போளி என்கிற கடையில் கோதுமையில் தயாராகும் போலிதான் கிடைக்கும். அந்தப் பகுதியின் ஸ்பெஷல் போளி ஷாப் என்றால் அது இந்தக் கடைதான். ஸ்வீட் போளி, மசாலா போளி என நான்கு விதமான சுவைகளில் போளியை வழங்கும் இந்தக் கடை 70 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருவதென்பது கூடுதல் சிறப்பு. பல பேருக்கு ஃபேவரைட் ஸ்பாட்டாக இருக்கும் இந்தக் கடை இப்போது ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு