Food spot

பனீர் பட்டர் மசாலா

சைவ பிரியர்களின் அசைவம் என்றால் அது பனீர்தான். அந்த பனீரைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் ஏராளம் இருந்தாலும் பனீர் பட்டர் மசாலா சாப்பிடுவதற்கு எப்போதும் ஒரு தனிக்கூட்டம் இருக்கும். சென்னையில் இந்த பனீர் பட்டர் மசாலா பல உணவகங்களில் கிடைத்தாலும் சாலிகிராமம் ஜல்பான் ரெஸ்டாரென்டில் கூடுதல் சுவையில் இருக்கும். அடுப்பில் சுட்டுக் கொடுக்கிற ரொட்டியோடு சேர்த்து இந்த பனீர் பட்டர் மசாலாவை சேர்த்துச் சாப்பிடும்போது சுவை நாவில் தாளமிடும். அந்தளவிற்கு அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும் இந்த ஒரு டிஷ்சை சாப்பிடுவதற்கே சைவப் பிரியர்கள் மட்டுமில்லாமல் அசைவப் பிரியர்களும் படை எடுக்கிறார்கள்.

ஹைதராபாத் பிரியாணி

உலகம் முழுவதுமே பெரும்பாலானவர்களால் உண்ணக்கூடிய உணவு என்றால் அது பிரியாணிதான். ஆன்லைன் உணவு ஆர்டர்களில் கூட வருடக் கடைசியில் அதிகமாக ஆர்டர் செய்யும் உணவுப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பிரியாணிதான். அப்படிப்பட்ட பிரியாணி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் சமைக்கப்பட்டு சுவையை மையமாகக் கொண்டு வேறுவேறு பெயரில் அழைக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் ஹைதராபாத் பிரியாணி. சீரகச்சம்பா, பாஸ்மதி பிரியாணிகளுக்கு மத்தியில் அரும்பாக்கத்தில் இருக்கிற சமீஸ் பிரியாணி என்கிற சிறிய கடையில் இந்த ஹைதராபாத் பிரியாணி மிகுந்த சுவையில் கிடைக்கிறது. எப்போது கடைக்குச் சென்றாலும் கூட்டமாகவே இருக்கும் இந்த உணவகத்தில் வரிசையில் நின்று சாப்பிட்டு வருகிறார்கள் உணவுப் பிரியர்கள்.

டெடிபியர் தோசை

ஒரு நாளில் ஒரு வேளையாவது நாம் தோசை சாப்பிடுகிறோம். அந்தளவிற்கு வீட்டில் தோசையின் ராஜ்ஜியம் சகஜமாகிவிட்டது. ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சலிப்பு ஏற்பட்டு நாம் வேறு உணவைத் தேடிச்சென்றாலும் மீண்டும் தோசையில்தான் கண் விழிக்கும்படி ஆகிவிடுகிறது. இப்படி ஒரே தோசையை சாப்பிட்டு சலிப்பு அடைந்தவர்களுக்காகவே அண்ணா நகரில் உள்ள கிரிஸ்பி தோசை என்கிற உணவகத்தில் வெரைட்டியான தோசைகள் கொடுத்து வருகிறார்கள். அதில் இப்போது ட்ரண்டிங்கில் இருப்பது டெடிபியர் தோசை. வடிவத்திலும் சரி சுவையிலும் சரி வித்தியாசமாக இருக்கும் இந்த தோசை குழந்தைகள் மத்தியில் பிரபலம் அடைந்து அனைவரும் விரும்பி சாப்பிடும் டிஷ் ஆக இருக்கிறது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?