வீடு வீடாக சென்று 3 லட்சம் பேருக்கு உணவு மற்ற மாநகராட்சிகளில் இருந்து 5,000 பணியாளர் வரவழைப்பு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னையில், கனமழை மற்றும் புயலின் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். அவருடன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:
ஏற்கனவே 990 மோட்டார் பம்புகள் பொருத்தியிருக்கிறோம். ஆனால் தொடர்ந்து கனமழை பெய்வதால் எவ்வளவு தான் இறைத்தாலும், ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் பாயும் சூழலில் மழைநீர் வெளியேற முடியவில்லை. சில இடங்களில் மோட்டார்களே மூழ்கிவிட்டது. அதனால் மழை நிற்கும் வரை தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

ஏற்கனவே முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 15 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மற்ற மாநகராட்சிகளில் இருந்து சென்னைக்கு 5000 பணியாளர்களை வரவழைத்துள்ளோம். மேலும் புதிதாக 5000 பேரை கொண்டு வர உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு ரூ.30 லட்சத்தில் புதிய காவல் நிலைய கட்டிடம்: ஆவடி துணை ஆணையர் திறந்து வைத்தார்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை: சீமான் ஆவேசம்

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு