சர்ச்சையை தொடர்ந்து பாகிஸ்தான் அதிபரின் செயலாளர் அதிரடி நீக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலமைப்பின் 75 வது பிரிவின் கீழ், ஒரு மசோதாவுக்கு 10 நாட்களுக்குள் அதிபர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே விதியின் கீழ், அதே 10 நாட்களுக்குள் ஒரு மசோதாவை மறுபரிசீலனைக்காக நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப முடியும். இந்நிலையில், அதிபர் ஆரிப் அல்வி, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் (திருத்த) மசோதா 2023 மற்றும் பாகிஸ்தான் ராணுவ (திருத்த) மசோதா 2023 ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களில் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த அல்வி, அந்த மசோதாக்களை நீர்த்து போக செய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்புமாறு தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறினார். இந்நிலையில், அதிபர் அல்வி தனது செயலாளர் வக்கார் அகமதுவை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் அவரது சேவைகள் இனி தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா