சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து: ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலையை இணைக்கும் பறக்கும் ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த போது பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது. பறக்கும் ரயில் பணிக்கு பாலம் அமைக்கும் போது இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி இடிந்து விழுந்தது. இரு தூண்களுக்கு இடையே 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

பாலம் இடிந்து விபத்து நேரிட்ட பகுதியில் ஆதம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை; விபத்து குறித்து விசாரித்து வருவதாக ஆதம்பாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்துக்குள்ளான பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது