ஆறுகள் மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். நீர்நிலைகள், காட்டாறுகளில் மழை காரணமாக தற்காலிக அருவிகள் ஏற்படும்; எந்த ஒரு நீர்நிலைக்குள்ளும் இறங்க வேண்டாம். தாமிரபரணி, கடனா, சிற்றாறு, நம்பியாறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகளில் இறங்க வேண்டாம். கால்நடைகள், வாகனங்களை இறக்க வேண்டாம். கடற்கரை ஓரங்களில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலை ஆறுகள் மற்றும் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதவி தேவைப்படுவோர் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.

Related posts

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு