பாடந்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகேயுள்ள பாடந்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகள், சாலைகளால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். உதகை -கூடலூர் சாலையில் மரம் விழுந்ததால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 2ஆவது நாளாக தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியது. அதி கனமழைக்கான எச்சரிக்கை தொடர்ந்து நீலகிரியில் பேரிடர் மீட்புப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

Related posts

போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி தலைமையில் சிறப்பு படை அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கோரி மனு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் திட்டம் தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு