கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை


பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேலும் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் பிற்பகல் முதல் இரவு 11 மணி வரை கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்