சதுரகிரி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் மழை காரணமாக பக்தர்கள் மலையேற வனத்துறை தடை விதித்தது. இதனால் பிரதோஷ நாளான நேற்று தாணிப்பாறை அடிவாரம் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே சதுரகிரி மலையில் பெய்த கனமழை காரணமாக கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, வழுக்குப்பாறை ஓடை உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளுக்குச் செல்ல பொதுமக்கள், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி