வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

தூத்துக்குடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பாக நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதீத வெள்ளபெருக்கு காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நெல்லை, தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியின் மூலம் தொடர்ப்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மேலும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நியமித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து விமானம் மூலம் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பாக நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி., தூத்துக்குடி, நெல்லை ஆட்சியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் தூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ள பாதிப்பு குறித்த புகைப்படங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு