கடம்பத்தூர் ஒன்றியத்தில் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி: எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வி.ஜிராஜேந்திரன் எம்எல்ஏ ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கினார். திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் மேற்கு, கிழக்கு ஒன்றியங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ், அரிகிருஷ்ணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்ட அவைத் தலைவர் க.திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆதிசேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜிராஜேந்திரன் தலைமை தாங்கி வெள்ள நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கினார்.

இதில் திருவாலங்காடு கிழக்கு ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பிரசன்னகுமார், உளுந்தை கோபால், ரவி, கீதா முனுசாமி, காமராஜ், தேவா, கண்ணதாசன், துரை, நீலாவதி ராஜேந்திரன், நாராயணன், மனோஜ், சரத்பாபு, கார்த்திகேயன், உதயா, மதன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் உளுந்தை எம்.கே.ரமேஷ், குபேரன், ஆல்பர்ட், தேவி கலா ஆரோக்கியசாமி, ஜானகி அகஸ்டின், தனலட்சுமி பாண்டியன், தங்கராஜ், தட்சிணாமூர்த்தி, வேதாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு