வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரைகள் விளக்கு கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. முதல் இரண்டு கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், பதக்கம், குடுவை உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இவை அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை 1,700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் சுடுமண் முத்திரைகள், விளக்கு, கல்பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு