சுடுமண் பந்து கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண் பந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை தோண்டப்பட்ட 15 குழிகளில் சுடுமண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி உள்ளிட்ட 3,050க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் தோண்டப்பட்ட குழியில், சுடுமண்ணால் ஆன பந்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘இந்த மண் பந்துகள் கவட்டையில் வைத்து மிருகங்களை வேட்டையாடுவதற்கும், விளையாடுவதற்கும் முன்னோர் பயன்படுத்தி இருக்கலாம்’ என்றார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி