ரெங்கநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்

 

கரூர், ஏப். 27: கரூரில் உள்ள அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. ஆண்டுதோறும் கரூர் அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த விழாவினை முன்னிட்டு நேற்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை கோயில் வளாகத்தில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்தரை திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 27ம்தேதி முதல் மே 1ம்தேதி வரை திருநாள் பல்லாக்கு நிகழ்ச்சிகளும், முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாண நிகழ்வும், மே 4ம்தேதி திருத்தேரோட்ட நிகழ்வும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொள்ளவுள்ளனர். சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்