மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் துவக்கம்

ராமேஸ்வரம்: தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் மீன்பிடி தடை அமலில் இருக்கும். இக்காலத்தில் வங்காள விரிகுடா, பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை உள்ளது. இதனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான தமிழக கடல் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைநிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தடை இன்று (ஏப். 14) நள்ளிரவு 12 மணி முதல் துவங்குகிறது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நேற்றே கரைநிறுத்தம் செய்யப்பட்டன. மீன்பிடி தடையால் மீன்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது விடும்.

Related posts

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி