மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முறையான செயல்திட்டத்தை ஒன்றிய, மாநில அரசு வகுக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முறையான செயல்திட்டத்தை ஒன்றிய, மாநில அரசு வகுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானவர்களை பலிவாங்கியது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியாகினர். சுனாமி பேரலையால் பலியானவர்களின் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் சுனாமி நினைவு தினத்தை ஒட்டி தனது எக்ஸ் பக்கத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், இயற்கையின் இரக்கமற்ற நியதியால் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலையால் உயிர்நீத்த நம் சொந்தங்கள் அனைவரின் 19ம் ஆண்டு நினைவுதினம் இன்று. ஒவ்வொரு ஆண்டும் சுனாமி தினத்தன்று அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், புயல், கனமழையால் இன்றவுளவும் அச்சுறுத்தப்பட்டு வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முறையான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை