மீனவர் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கை வசம் உள்ள 47 மீனவர்களையும் 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். 2024-ல் மட்டும் இலங்கை கடற்படையால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 27 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவ சமுதாயத்தினர் இடையே பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது என்று கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு